இயக்குனரும், நடிகருமான வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்

இயக்குனரும், நடிகருமான வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்

62

Director and Actor Vietnam Veedu Sundaram Passes Away

நடிகரும், இயக்குனருமான வியட்நாம் வீடு சுந்தரம் (வயது 86) சென்னையில் இன்று காலமானார். நாடக நடிகரும், கதை எழுத்தாளருமான சுந்தரம், கடந்த 1970-ம் ஆண்டு ‘வியட்நாம் வீடு’ என்ற படத்தில், நடிகராக அறிமுகமானதன் மூலம் வியட்நாம் வீடு சுந்தரம் என்று அழைக்கப்பட்டார்.

மேலும், சிவாஜி கணேசன் நடிப்பில் பெரும் வெற்றிபெற்ற கவுரவம் என்ற படத்தை இயக்கினார். எம்.ஜி.ஆர், சிவாஜி, மற்றும் முத்துராமன், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

வியட்நாம் வீடு சுந்தரம் கடந்த சில நாட்களாகவே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார், அவர் இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு திரைப்பட கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY