Home Tamil Cinema News இறுதிச்சுற்று படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர்கள் பாலா, ஷங்கர்

இறுதிச்சுற்று படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர்கள் பாலா, ஷங்கர்

193

Iruthi-Suttru-stills-013-740x431

மாதவன்-ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்துள்ள இறுதிச்சுற்று படம் திரையுலகின் பல்வேறு தரப்பினரிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இதில் மாதவன் நீண்ட வருடங்கள் கழித்து சோலோவாக களமிறங்கியிருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் தயாராகி இருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் சந்தோஷ் நாராயணன்.

இறுதிச்சுற்று படம் பற்றி பாலா கூறுகையில், மில்லியன் டாலர் பேபி படத்தை விட குத்துச்சண்டை படத்தில் எனக்கு இறுதிச்சுற்று படம் தான் பிடித்திருக்கிறது. இதுவரை வெளியான படங்களில் மாதவனின் சிறந்த நடிப்பு என்றால் இந்த படம் தான். இறுதிச்சுற்று படத்தின் ஒட்டுமொத்த குழுவுக்குமே இது தான் ஆரம்பச்சுற்று. அடுத்ததாக என்ன பண்ணப் போகிறார்கள்? என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அவரோடு இயக்குனர் ஷங்கரும் இறுதிச்சற்று படம் பற்றி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பெண்களுக்கு சல்யூட் அடிக்கும் அளவுக்கு இறுதிச்சுற்று படம் இருக்கிறது, இயக்குனர் சுதா கொங்கராவின் கடும் உழைப்புக்கு என் பாராட்டுக்கள். படத்தில் மாதவன் மற்றும் ரித்திகா-வின் நடிப்பு அருமையாக இருக்கிறது. சந்தோஷின் இசையும் அருமையாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.