Home Tamil Breaking News பாரதிராஜாவின் கனவை நனவாக்கும் பாலா

பாரதிராஜாவின் கனவை நனவாக்கும் பாலா

92

Bala-Bharathirajaஇயக்குனர் பாரதிராஜா பல வருடங்களாக எடுக்க நினைத்து, முடியாமல் போன படம் குற்றப்பரம்பரை. 2007ல் ஒரு தமிழ் வார இதழுக்கு பேட்டியளித்த பாரதிராஜா என் வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் படம் குற்றப்பரம்பரை.

நானும் இளையராஜாவும் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் இணைய போகிறோம். அந்தப் படத்தை எடுக்காமல் என் திரையுலக வாழ்க்கை நிறைவு பெறாது என்று கூறினார். ஆனால் அவரால் அந்தப் படத்தை சில காரணங்களால் எடுக்க முடியாமல் போனது.

இந்த நிலையில் பாரதிராஜாவின் கனவு படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார் பாலா. அந்த படத்திற்காகத்தான் விஷால், ஆர்யா, அதர்வா, ராணா, அர்விந்த்சாமி என பெரிய நடிகர் பட்டாளத்தை அவர் ஒப்பந்தம் செய்துள்ளார் என திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

இயக்குனர் பாரதிராஜாவின் கனவுப் படத்தை பாலா இயக்கும் தகவல் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.