ஈழத்தமிழர்கள் பற்றிய பேச்சு குறித்து இயக்குனர் சேரன் புதிய அறிக்கை

ஈழத்தமிழர்கள் பற்றிய பேச்சு குறித்து இயக்குனர் சேரன் புதிய அறிக்கை

90

Director Cheran Clarifies His Speech about Eela Tamils

இயக்குனர் சேரன் நேற்று ஈழத்தமிழர்கள் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார். அவர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக உள்ளது என அவர் கூறியதற்கு, பலரும் சமூக வலைதலங்கள் மூலமாகவும், நேரடியாகவும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.

தற்போது இந்த விவகாரம் பெரிதானதால் இது பற்றின ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார் அவர், அதில் கூறியிருப்பதாவது, ‘என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு நான் எதற்காக பேசினேன் யாரைப்பற்றி பேசியிருப்பேன் என புரிந்திருக்கும். என்னைத்தெரியாதவர்களுக்கு நான் என்ன விளக்கம் சொல்வது”.

“இதுவரை திரையுலகில் இருந்து வெளிநாடுகளில் இருந்து திருட்டு DVD வருகிறது… ஆன்லைனில் பதிவேற்றம் செய்கிறார்கள் என்று கதறியபோது இந்த விமர்சகர்கள் ஏன் ஒரு வார்த்தைகூட அவர்களை அவர்களது செயல்களை கண்டித்து வெளியிடவில்லை. அப்போ எங்களோட வாழ்க்கை பற்றி அவர்களுக்கு கவலை இல்லையா.”

“உலகெங்கும் நண்பர்களை கொண்டு C2H நிறுவனக்கிளைகள் தொடங்க முயன்றபோது அவர்களை தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் இன்றும் திருட்டுத்தனமாக விற்பவர்கள்தான்’ என்று கூறியுள்ளார்.

மேலும், ஒட்டுமொத்த இலங்கைத்தமிழர்களை நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு. நல்ல குணமும் நேர்மையும் கொண்ட ஈழத்தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் என்னை நன்கு தெரியும். அவர்கள் யாரும் என்னை தவறாக நினைக்கமாட்டார்கள். என்றும் கூறியுள்ளார்’.

NO COMMENTS

LEAVE A REPLY