Home Tamil Cinema News சசிக்கு பிச்சைக்காரனால் கிடைத்த பரிசு!

சசிக்கு பிச்சைக்காரனால் கிடைத்த பரிசு!

100

udhayanidhi-sasi

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை இயக்குனர் சசி இயக்கியிருந்தார். இந்தப் படம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு, வெற்றி பெற்றது. இதனால் இயக்குநர் சசிக்கு உடனே அடுத்தப் படம் கிடைத்துள்ளது.

அதுவும் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை சசி இயக்கவுள்ளார். இந்த தகவலை உதயநிதி மற்றும் தேனாண்டாள் நிறுவனமும் உறுதி செய்துள்ளனர்.

உதயநிதி தற்போது மனிதன் மற்றும் சுசீந்திரன் படங்களில் நடித்துவருகிறார். அந்தப்படங்களின் வேலைகள் முடித்ததும் சசி படத்தை தொடங்குகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு புதிய படம் ஒன்றையும் இயக்கப் போகிறாராம் இயக்குனர் சசி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here