Home Tamil Cinema News நடிகர் அஜித்தால் சிக்கலில் மாட்டிய இயக்குனர்

நடிகர் அஜித்தால் சிக்கலில் மாட்டிய இயக்குனர்

151

maxresdefault

அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை சிவ இயக்கியிருந்தார். இந்தப்படத்தை தொடர்ந்து மீண்டும் சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தை சிவா தான் இயக்கப்போவதாக கூறப்பட்டுவந்தது.

இந்தநிலையில் சிவா தமிழில் இயக்கிய முதல் படத்தின் தயாரிப்பாளருக்கே தன் அடுத்த படம் என ஒரு ஒப்பந்தம் போட்டுவிருந்ததாக கூறப்படுகின்றது. அஜித்தின் அடுத்தடுத்த படங்களால் முதலில் இதை கண்டுக்கொள்ளவில்லையாம்.

சிவா முதலில் இயக்கிய அந்த நிறுவனத்தினர் அவரிடம் படம் தயாரிப்பு குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்களாம். இந்த பிரச்சனையை அறிந்த சத்யஜோதி நிறுவனம் முதலில் அந்த பிரச்சனையை தீர்த்து விட்டு வாருங்கள் என்று கூறி விட்டதாம். அஜித் தரப்பில் இருந்து இதுகுறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.