இயக்குனர் விஜய்-அமலாபால் நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி மனு தாக்கல்

இயக்குனர் விஜய்-அமலாபால் நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி மனு தாக்கல்

61

Director Vijay and Amala Paul Divorce Petition Submit in Courtநடிகை அமலாபால் – இயக்குநர் விஜய் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அமலா பால் திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்துவருவதால், இதுதொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், இயக்குனர் விஜய்யும் அமலாபாலும் இன்று சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் சமரச விவாகரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். நீதிபதி தீபிகா முன்னிலையில் இருவரும் விவகாரத்து செய்யப்போவதற்கான விருப்ப மனுவை நேரில் அளித்தனர்.

இவர்களது மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, இவர்களது விவகாரத்து குறித்த விஷயங்கள் நீதிமன்றம் வாயிலாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் விஜய்-அமலாபால் விவகாரத்து செய்யப்போகும் செய்தி நீதிமன்றம் வரை சென்றிருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY