தயாரிப்பாளர் சங்கம் முன் போராட்டம் நடத்திய இயக்குனர்

தயாரிப்பாளர் சங்கம் முன் போராட்டம் நடத்திய இயக்குனர்

76

 

vikraman

தமிழ் சினிமா இயக்குனர்கள், சினிமா பட தலைப்புகள் அன்லைனில் பதிய செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் முன் போராட்டம் செய்துள்ளனர். பின்னர் தயாரிப்பாளர் சங்கத்தில் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், திரைப்பட தலைப்புகளை பதிவு செய்ய சில நடைமுறைகள் இருக்கிறது. இந்த நடைமுறைகள் முடிந்து பெயர் வைப்பதற்கு காலதாமதம் ஆகிறது. தலைப்பு வைத்த பின், பல நாட்கள் கழித்து அந்த பெயர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது எனக்கூறி, சிலர் பேரம் பேசுகின்றனர்.

பதிவு நடைமுறையில் உண்மைத் தன்மை இல்லை. இதனால், வீண் சர்ச்சை ஏற்பட்டு இழப்பும் அதிகரிக்கிறது. இனிமேல், திரைப்படங்களின் தலைப்புகள், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அதன் தேதி, நிறுவனத்தின் பெயர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் கதாசிரியர் பெயர்களை வரிசை எண்ணுடன் வெளியிட வேண்டும்.

இந்த குறைபாடுகளை தீர்க்க பட தலைப்புகளை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். ஆன்லைன்

பதிவு கடினமாக இருந்தால் அதற்குரிய மென்பொருளை நாங்களே வடிவமைத்து தர தயாராக உள்ளோம்.

இது இயக்குனர்களுக்கு மட்டுமில்லாது, எழுத்தாளர்கள், தயாரிப்பார்களுக்கும் உதவியாக இருக்கும் என்று சினிமா இயக்குனர் குழுவினர் கூறியிருக்கின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY