Home Tamil Cinema News ஹீரோக்களுக்கு இணையாக முன்னேறும் நயன்தாரா.. புகழும் இயக்குனர்கள்..

ஹீரோக்களுக்கு இணையாக முன்னேறும் நயன்தாரா.. புகழும் இயக்குனர்கள்..

21

சென்னை: நயன்தாரா படங்கள் அனைத்தும் வசூல் குவிப்பதால் சம்பளமும் ரூ.4 கோடியாக உயர்ந்து இருக்கிறது. தற்போது நயன்தாரா கைவசம் தமிழ், தெலுங்கில் 9 படங்கள் உள்ளன. அவர் நடித்துள்ள வேலைக்காரன், அறம் படங்கள் விரைவில் திரைக்கு வருகின்றன.

அறம் படத்தில் மாவட்ட கலெக்டராக வருகிறார். இந்த படத்தில் சமூக அக்கறையுடன் அவர் மேற்கொள்ளும் புரட்சிகரமான திட்டங்கள் ரசிகர்களை கவரும் என்கின்றனர். அறம் படத்தை இயக்குனர்கள் சிலர் பார்த்து விட்டு சமூக வலைத்தளத்தில் நயன்தாராவை புகழ்ந்துள்ளனர்.

இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா ஆகிய படங்களிலும் நயன்தாரா நடித்துக்கொண்டு இருக்கிறார். முன்னணி கதாநாயகர்களுடன் வெறும் காதலியாக மட்டும் நடிக்க வரும் வாய்ப்புகளை மறுத்து விடுகிறார்.