Home Tamil Breaking News உடல்நலம் தேறியதையடுத்து, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயாராகும் கருணாநிதி..

உடல்நலம் தேறியதையடுத்து, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயாராகும் கருணாநிதி..

79
SHARE

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்றார். உடல்நலம் ஓரளவு தேறியதையடுத்து கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் எந்த பொதுநிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்ளாமல் இருந்தார்.

தற்போது உடல்நலம் தேறியுள்ள நிலையில், சமீபத்தில் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்திற்கு சென்றார். அவரை தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அழைத்துச் சென்று முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிடச் செய்தார்.

இந்நிலையில், ஓராண்டுக்குப் பிறகு முதல் முறையாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் கருணாநிதி. வரும் நவம்பர் 1-ம் தேதி கருணாநிதியின் கொள்ளுப்பேரனும் மு.க.முத்துவின் பேரனுமான மனுரஞ்சித்- நடிகர் விக்ரமின் மகள் அக்சிதா திருமணம் நடைபெற உள்ளது. இதில் கருணாநிதி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here