Home Tamil Cinema News பணத்துக்காக நடிக்க கூடாதென மாதவன் பேச்சு

பணத்துக்காக நடிக்க கூடாதென மாதவன் பேச்சு

144

irudhi suttru

நடிகர் மாதவன் நடித்துள்ள ‘இறுதிச் சுற்று’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. கதானாயகியாக இதில் ரித்திகா சிங் நடித்துள்ளார். இந்த படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடந்தது. அதில் மாதவன் கூறியதாவது.

நான் இறுதிச்சுற்று படத்தில் நடித்தபோது பல தடங்கல்கள் வந்தன. ஒவ்வொரு தடவை படப்பிடிப்புக்கு சென்றபோதும் பிரச்சினைகளை சந்தித்தோம். கஷ்டங்களும் அவமானங்களும் ஏற்பட்டன.

படத்தின் ஒரு கட்டத்தில் இந்த படத்தை கைவிட்டு விட்டு வேறு படத்துக்கு போய்விடலாம் என்றும் யோசித்தோம். ஆனால் எனக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் இந்த படத்தின் கதாபாத்திரம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்று கூறி தடைபடாமல் தடுத்தார். அதன்பிறகு படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி ஒரு வழியாக முடித்தோம். படம் வெளியான பிறகு நல்ல வரவேற்பை பெற்றது.

பாராட்டுகளும் கிடைத்தன. ஏற்கனவே பட்ட அவமானங்கள் மறைந்து விட்டன. பணத்துக்காக நடிக்க கூடாது. பாராட்டு கிடைப்பது மாதிரியான நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த படம் மூலம் எனக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று இங்கே பேசினார்கள்.

நான் எங்கேயும் போக மாட்டேன். தமிழ் சினிமாதான் எனக்கு உயிர் என்று மாதவன் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here