Home Tamil Cinema News ஈட்டி படம் பல்வேறு மொழிகளில் ரீமேக்காகிறது

ஈட்டி படம் பல்வேறு மொழிகளில் ரீமேக்காகிறது

490

Eetti-Movie

அதர்வாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து குளோபல் இன்போடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்த படம் ‘ஈட்டி’. ரவி அரசு இப்படத்தை இயக்கியிருந்தார். கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விளையாட்டை மையமாக வைத்து அதில் காதல், ஆக்‌ஷன் என ரசிகர்கள் ரசிக்கும் விதமாக இப்படம் அமைந்தது.

‘ஈட்டி’ படத்தில் அதர்வா நடித்த கதாபாத்திரத்தில், இந்தியில் ஷாஹித் கபூரும், தெலுங்கில் நிதினும், கன்னடத்தில் யாஷும் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழில் இப்படத்தை தயாரித்த குளோபல் இன்போடெயின்மென்ட் நிறுவனம் தெலுங்கு ரீமேக் பதிப்பையும் தயாரிக்கிறது. தமிழில் இப்படத்தை இயக்கிய இயக்குனர் ரவி அரசு மற்ற மொழிகளிலும் இப்படத்தை இயக்கவுள்ளார்.

தமிழில் ஒரு படம் வெற்றி பெற்றால், அப்படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான ஈட்டி படமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here