Home Tamil Movie Reviews ஈட்டி – விமர்சனம்

ஈட்டி – விமர்சனம்

621
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

ஒரு கதாபாத்திரத்துக்காக பிரம்மிக்க வைக்கும் உடல் உழைப்பைக் கொட்டிக் கொடுத்து இருக்கிறார் அதர்வா. விளையாட்டை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்த படத்தை சற்று வித்தியாசமான கோணத்தில் இயக்கி சபாஷ் பெற்றிருக்கிறார் இயக்குனர் ரவி அரசு. சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடருந்து அழகான நடிப்பை வாங்கியிருக்கிறார்.

2.5
இயக்கம்: ரவி அரசு
ஒளிப்பதிவு: சரவணன் அபிமன்யு
எடிட்டிங் ராஜா முகமது
இசை: ஜி.வி.பிரகாஷ்
தயாரிப்பு: குளோபல் இன்ஃபோடைன்மென்ட், எஸ்.மைக்கேல் ராயப்பன்
நடிகர்கள்: அதர்வா, ஸ்ரீ திவ்யா, ஜெயபிரகாஷ், நரேன், முருகதாஸ்

போலீஸ் அதிகாரியான ஜெயப்பிரகாஷ் தஞ்சாவூரில் தனது மனைவி, மகன் அதர்வா மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். அதர்வாவின் உடம்பில் ஒரு குண்டூசி குத்தினால்கூட ரத்தம் நிற்காமல் செல்லும் பிளீடிங் டிஸ் ஆர்டர் எனப்படும் ரத்த உறைவுத் திறனின்மை நோய் இருக்கிறது. இதை அதர்வா சிறு வயதில் இருக்கும்போதே தெரிந்துகொண்ட ஜெயப்பிரகாஷ் அவரை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.

23

அவனது தந்தையான ஜெயப்பிரகாஷ், தன் மகன் தேசிய மற்றும் உலக அளவில் விருதுப் பதக்கங்கள்  பெற்று , அதன் மூலம் காவல் துறையிலேயே பெரும் பதவிக்கு வரவேண்டும் என்பதே லட்சியம். விளையாட்டில் அதிக கவனம் செலுத்தினால் அதர்வாவின் பிரச்சினையை ஓரளவு சரிசெய்யலாம் என்று அவரை விளையாட்டில் அதிக ஆர்வம் காட்ட வைக்கிறார்.

கல்லூரி படிக்கும் அதர்வா, தடகள பயிற்சியாளர் ஆடுகளம் நரேன் மூலம் தடகள வீரராக உருவெடுக்கிறார். அதன்பின்னர் விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் அதர்வாவை போலீஸ் அதிகாரியாக்க முயற்சிக்கிறார் ஜெயப்பிரகாஷ்.

அதர்வாவுக்கு சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்திக்கும் (ஸ்ரீதிவ்யா), ஒரு தவறான தொலைபேசி அழைப்பால் ஏற்படும் குழப்பமும் சண்டையும் நட்பாகி பின்னர் நேரில் பார்க்காமலே காதலாகிறது. இந்த சமயத்தில் தடகள இறுதி போட்டிக்காக சென்னைக்கு வருகிறார் அதர்வா. சென்னை வந்தவுடன் ஸ்ரீதிவ்யாவை சந்திக்க செல்கிறார் அதர்வா.

சென்னையில் இருபத்தைந்து வருடமாக கள்ள நோட்டு அடிக்கும் ஒரு சமூக விரோதியின் முக்கியக் கையாளான ஏகா என்பவன், நாயகி மீது ஆசைப் படுகிறான்.

இதற்கிடையில் இவர்களது கள்ள நோட்டு மாற்றும் சமூக விரோத வேலையில் நாயகியின் அண்ணன் பாதிக்கப்படுகிறான். அது தெரியாமல் நாயகியை ஏகா பெண் கேட்டு வருகிறான். அவர்களை அண்ணன் அவமானப்படுத்துகிறான்.அவனை கொல்ல ஏகா திட்டமிடுகிறான்.

Eetti Movie Stills

இதற்கிடையில் அதர்வா, தேசிய தடகளப் போட்டிக்காக சென்னை வருகிறான். நாயகியை நேரில் சந்தித்து காதல் வளர்க்கிறான். இதற்காக பிரச்சினையில் ஸ்ரீதிவ்யாவிற்காக அதர்வா தலையிடுகிறார். இதனால் கள்ள நோட்டு கும்பல் அதர்வாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்கள். மேலும் அதர்வாவிற்கு சிறு காயம் பட்டால்கூட உயிரிழந்து விடுவான் என்பதை அந்தக் கும்பல் தெரிந்துக் கொள்கிறது.

 இறுதியில் அதர்வா அந்த கும்பலிடம் தப்பித்து திட்டமிட்டபடி தடகள போட்டியில் கலந்துக் கொண்டாரா? அவரது தந்தையின் லட்சியம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

உடல் குறைத்து உருவேறி, நிஜ தடகள விளையாட்டு வீரனாகவே வில்லாக, வில்லில் இருந்து கிளம்பும் அம்பாக தன்னை மாற்றிக் கொண்டு அசத்தி இருக்கிறார் அதர்வா. ஒரு கதாபாத்திரத்துக்காக பிரம்மிக்க வைக்கும் உடல் உழைப்பைக் கொட்டிக் கொடுத்து இருக்கிறார்.

நிஜ தடை ஓட்ட வீரனின் உடல் மொழிகளை நூறு சதவீதம் கைக் கொண்டிருக்கிறார். அதர்வாவின் தந்தை முரளி இப்போது இருந்தால், தன் மகனின் உழைப்பைக் கண்டு உச்சி முகர்ந்து சிலிர்த்திருப்பார். நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெருகேற வேண்டும்.

Eeati-Stills-1

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யா ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பொறுப்பான அப்பாவாக ஜெயப்பிரகாஷ், ஊக்கம் கொடுக்கும் பயிற்சியாளராக ஆடுகளம் நரேன் ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

விளையாட்டை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்த படத்தை சற்று வித்தியாசமான கோணத்தில் இயக்கி சபாஷ் பெற்றிருக்கிறார் இயக்குனர் ரவி அரசு. சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடருந்து அழகான நடிப்பை வாங்கியிருக்கிறார். படம் முழுக்க ரசிக்க வைத்த இயக்குனர் திரைக்கதையை சிறிது சுருக்கியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ரசிக்கும் விதம். பின்னணி இசையை சிறப்பாக கொடுத்திருக்கிறார். சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில்… ஈட்டி – இன்னும் கூர்மையாக இருந்திருக்கலாம்!