Home Tamil Breaking News ரூ.1 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதிக்க தேர்தல் ஆணையம் பரிசீலனை

ரூ.1 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதிக்க தேர்தல் ஆணையம் பரிசீலனை

143

வியாபாரிகளின் எதிர்ப்பை அடுத்து வாகனங்களில் ரூ.1 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் மே மாதம் 16ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பணம் பறிமுதல் தொடர்பாக பல்வேறு சர்ச்சசைகள் வெடித்து வருவதால் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ரூ.1 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானி, ரூ.50,000 வரை எடுத்துச் செல்லும்போது எந்தவித ஆவணங்களும் தேவையில்லை என்றார்.

மேலும் அடுத்த மாதம் 22ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ளதால் அன்றிலிருந்து மேலும் கண்காணிப்பு அதிகப்படுத்தப்படுமென தெரிவித்துள்ளார்.