Home Tamil Cinema News எந்திரன் 2 படம் ரூ.330 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டது

எந்திரன் 2 படம் ரூ.330 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டது

127

2.0

ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன் 2’ திரைப்படம் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இதில் ரஜினி ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் வில்லன் பாத்திரம் ஏற்றுள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ‘எந்திரன் 2’ தயாரிப்பிற்கான காப்பீட்டு வசதியை அளித்திருக்கின்றன.

‘எந்திரன் 2’ திரைப்படம் ரூ.330 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திய திரை உலகில் அதிகபட்ச காப்பீட்டு வசதி பெற்ற படம் என்ற பெருமையை பெறுகிறது.

இத்திரைப்படம் மற்றொரு அம்சத்திலும் புதிய சாதனை அளவை எட்டியிருக்கிறது. தமிழுடன் வேறு சில மொழிகளிலும் தயாராகும் இந்தப் படத்தில் நடிக்கும் நான்கு முன்னணி நட்சத்திரங்களின் சம்பளம் மட்டும் ரூ.150 கோடி என்று கூறப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here