Home Tamil Cinema News எந்திரன் 2 படத்தின் ஆரம்ப வேலைகள் துவங்கின

எந்திரன் 2 படத்தின் ஆரம்ப வேலைகள் துவங்கின

124

rajini- arnold- shankar

ரஜினியின் எந்திரன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதன் அடுத்த பாகமான எந்திரன் 2 படத்துக்கு அடுத்த மாதம் ரஜினிக்கு சிறப்பு மேக்-அப் டெஸ்ட் சென்னையில் நடைபெற உள்ளது.

தற்போது ரஜினி நடித்த கபாலி படம் வெளிவராத நிலையில் அவர் நடிக்கவுள்ள எந்திரன் 2 படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டன. ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. ஏமி ஜாக்ஸன் கதாநாயகியாக நடிக்க உள்ளார். வில்லன் வேடத்துக்கு அர்னால்ட்-டிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் ஷங்கர். ஆனால் இது பற்றின முலுமையான தகவல்களை இயக்குனர் சங்கர் வெளியிடவில்லை.

எந்திரன் 2 படம் முழுவதும் 3டி கேமராவில் படமாக்கப்பட உள்ளது. இந்தியாவில் 3டி கேமராவில் படமாக்கப்படும் முதல் படம் ‘எந்திரன் 2’ என்று ஆகும். படத்தில் உள்ள சில காட்சிகளை மோசன் கேப்சர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் படமாக்க உள்ளனராம். படத்திற்கான ஒளிப்பதிவு வேலைகளை நீரவ் ஷா. செய்ய உள்ளார். எந்திரன் 2 படத்தின் முதற்கட்டப் பணி அடுத்த மாதம் தொடங்க உள்ளது. தற்போது கபாலி படத்துக்காக பாங்காங்கில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடித்துகொண்டுள்ளார் ரஜினி. இதற்கு கொஞ்சம் இடைவெளி விட்டு, எந்திரன் 2 படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகளில் கலந்துகொள்கிறார்.

1576

வரும் டிசம்பர் முதல்வாரத்தில் சென்னை வரவுள்ள ரஜினிக்கு சிறப்பு மேக்-அப் டெஸ்ட் நடைபெற உள்ளது. இதற்காக அவதார் போன்ற முக்கியமான படங்களில் பணியாற்றிய ஒப்பனைக் கலைஞர் சீன் ஃபுட், சென்னை வருகிறார். எந்திரனை பொலவே அதன் இரண்டாம் பாகமும் பிரம்மாண்டமாக வரும் என நம்பலாம்.