Home Tamil Cinema News எந்திரன் பட விவகாரத்தில் சன் பிக்சர்ஸ்க்கு அபராதம்

எந்திரன் பட விவகாரத்தில் சன் பிக்சர்ஸ்க்கு அபராதம்

107

endhiran1_140910

கடந்த 2010ல் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் எந்திரன் என்னுடைய கதையென்றும், அதை ஷங்கர் திருடி எந்திரன் என்ற படத்தை இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. எனவே கலாநிதிமாறன் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பாக 5 ஆண்டுகள் கழித்து ஒரு மனுவை உயர் நீதிமன்றத்தில் சன் பிக்சர்ஸ் தாக்கல் செய்தது. அதில் ஆரூர் நாடன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் எங்களுக்கு 2010 டிசம்பர் 20-ம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டு, 2011 பிப்ரவரி 19-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அலுவலக மாற்றம் காரணமாக அந்த நோட்டீஸ் எங்களுக்கு 2015-ல்தான் கிடைத்தது.

அதனாலேயே இந்த மனுவை தாமதமாக தாக்கல் செய்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம். சத்தியநாராயணன், தாமதமாக மனுவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த காலதாமதத்துக்கு அபராதமாக ரூ.25 ஆயிரத்தை மானாமதுரையில் உள்ள தொழுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here