Home Tamil Cinema News உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

585

sivakarthikeyan

டி.இமானின் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் நடித்து பொங்கலுக்கு வந்த ரஜினி முருகன் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படம் வெற்றியடைய டி.இமானின் இசையமைப்பும் ஒரு காரணம்.

ரஜினி உருகன் படம் வெளிவருவதற்கு முன்பே என்னம்மா இப்படி பண்றீங்களேமா பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. இந்த பாடல் ஒலிக்காத இடங்களே இல்லை என்ற அளவுக்கு இதன் தாக்கம் இருந்தது.

இந்த நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா 3 பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இவை சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.