Home Tamil Breaking News ஜிஎஸ்டி.,யிலிருந்து விலக்கு பெறும் 40 பொருட்கள்…

ஜிஎஸ்டி.,யிலிருந்து விலக்கு பெறும் 40 பொருட்கள்…

26

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நேற்று (செப்.,9) நடந்தது. 8 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், ஆட்டோ துறை பொருட்களுக்கான செஸ் வரி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு மாறாக அன்றாடம் பயன்படுத்தப்படும், 40 பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் பொருட்களுக்கான செஸ் வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்துவதற்கான சட்ட முன்வரைவுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதால், கார்களுக்கான ஜிஎஸ்டியை உயர்த்தவில்லை என கூறப்படுகிறது.

ரப்பர் பேண்ட், இட்லி தோசை மாவு, வறுத்த பருப்பு, புண்ணாக்கு, கஸ்டர்ட் பவுடர், புளி, அகர்பத்தி, பிளாஸ்டிக் ரெயின் கோட், காதி மற்றும் கிராம வளர்ச்சி கழகத்திடன் இருந்து பெறப்படும் காதி துணிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதியையும் நீட்டிக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறிய ரக கார்களுக்கு செஸ் வரி உயர்த்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.