Home Tamil Breaking News தீவிரவாதத்தால் தந்தையை இழந்த காஷ்மீர் சிறுமியின் கதறல்…

தீவிரவாதத்தால் தந்தையை இழந்த காஷ்மீர் சிறுமியின் கதறல்…

11

காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். இறுதி மரியாதையின்போது அவரது மகள் கண்ணீர் விட்டு கதறியது பலரது மனதை உருக்கியது.

காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்கு தலுக்கு அப்துல் ரஷீத் என்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் வீரமரணம் அடைந்தார். திங்கள்கிழமை அவரது உடலுக்கு போலீஸார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது சிறுமியான அப்துல் ரஷீத்தின் மகள் ஜோரா, தனது தந்தையை இழந்த சோகத்தில் கண்ணீர் விட்டு கதறினாள்.

இது பார்ப்பவர்கள் உள்ளத்தை உருக வைத்தது. சிறுமி அழும் படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது அனுதாபத்தை பெற்றுள்ளது. இந்த சிறுமிக்கு இப்படிப்பட்ட வேதனையான துயரம் ஏற்பட்டிருக்கக் கூடாது என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தெற்கு காஷ்மீரின் போலீஸ் டிஐஜி தனது பேஸ்புக் பதிவில் சிறுமிக்கு ஆறுதல் கூறியுள்ளார். அவர் தனது பதிவில், ‘‘இது ஏன் நடந்தது என்று புரிந்துகொள்ளும் வயது உனக்கு இல்லை. எங்களைப் போல போலீஸ்துறையில் பணியாற்றும் உன் தந்தை வீரத்திலும் தியாகத்திலும் முத்திரை பதித்துவிட்டார். உன் ஒவ்வொரு துளி கண்ணீரும் எங்கள் இதயத்தை உருக்குகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here