கபாலி ரசிகரான கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன்

கபாலி ரசிகரான கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன்

96

Famous Cricket Player Matthew Hayden Like Kabali

பிரபல ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் ஐபிஎல்-க்கு இணையாக தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் நடத்தும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்துவதற்காக சமீபத்தில் சென்னை வந்தார் ஹைடன்.

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பின்னர், மதுரைக்கு சென்று மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார். இந்நிலையில், மீண்டும் சென்னைக்கு திரும்பினார்.

சென்னை திரும்பியவுடன் ஆல்பர்ட் திரையரங்கில் ‘கபாலி’ படம் பார்த்து ரசித்தார். ‘கபாலி’ படத்தை பார்த்த அவர் படம் ரொம்பவும் கவர்ந்ததாகவும், ரஜினியின் ஸ்டைல் அனைத்தும் பிரம்மிப்பாக இருந்ததாகவும் கூறினார். ரஜினி ஸ்டைலில் தனது கூலிங் கிளாஸை போட்டு காண்பித்தும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

NO COMMENTS

LEAVE A REPLY