Home Tamil Sports News பரபரப்பான சூழ்நிலையில் மைதானத்தில் குட்டித்தூக்கம் போட்ட தோனி – இயல்பு மாறாதவர் என ரசிகர்கள் பாராட்டு

பரபரப்பான சூழ்நிலையில் மைதானத்தில் குட்டித்தூக்கம் போட்ட தோனி – இயல்பு மாறாதவர் என ரசிகர்கள் பாராட்டு

36

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது, ரசிகர்களின் இடையூறு காரணமாக, இந்திய வீரர் தோனி மைதானத்திலேயே சிறிது நேரம் தூங்கினார். இந்திய அணியின் வெற்றிக்கு 8 ரன்களே எடுக்க வேண்டும் என்ற நிலையில், உள்ளூர் ரசிகர்கள் சிலர் மைதானத்தில் இறங்கி இடையூறு செய்தனர்.

தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்து குழப்பத்தை ஏற்படுத்தினர். இதனால் போட்டி 35 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது ரோஹித் சர்மாவுடன் களத்தில் இருந்த இந்திய வீரர் தோனி புல்தரையில் படுத்து, குட்டித்தூக்கம் போட்டார்.

மைதானம் முழுவதும் பரபரப்புடன் காணப்பட்ட நேரத்தில், தோனி அதைப் பொருட்படுத்தாமல், சாதாரணமாக எடுத்துக் கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.