Home Tamil Cinema News கபாலியின் லீக் ஆன இண்ட்ரோ காட்சி பற்றிய ரசிகர்களின் கருத்து

கபாலியின் லீக் ஆன இண்ட்ரோ காட்சி பற்றிய ரசிகர்களின் கருத்து

145

Kabali

கபாலி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் அறிமுக காட்சி நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதில் ரஜினி மலேசிய சிறையிலிருந்து வெளியே வருவது போலவும், வெளியே வந்தவுடன் அவரிடம் 30 அப்பாவி தமிழர்கள் என்கவுண்டரில் சுடப்பட்ட செய்தியை சொல்வது போலவும் உள்ளது.

படம் வெளியாவதற்கு முன்னரே இப்படி லீக் ஆகியுள்ளது தமிழ் சினிமாதுறையில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விடியோ எங்கு யாரால் எடுக்கப்பட்டது? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அமெரிக்காவில் ரஜினிக்கு ஸ்பெஷலாக படத்தை திரையிட்டு காட்டியபோது தான் யாரோ அதை மறைந்திருந்து படமெடுத்து அப்லோடு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த காட்சி வைரலாக பரவ, படக்குழுவே பெரிதும் கவலைப்பட்டது போல் தெரியவில்லை. இருப்பினும் இதுபற்றி தயாரிப்பாளர் தாணு தற்பொழுது விசாரணை நடத்திவருகிறார்.

இந்த நிலையில் இந்த அறிமுக காட்சியை பார்த்த பலரும் ஷாருக்கான் நடிப்பில் வெளியான டான்- 2 பட்த்தில் வருவது போலவே உள்ளது என்று கருத்து தெரிவித்தனர். எதுவாக இருப்பினும் சூப்பர் ஸ்டார் வந்தா மட்டும் போதும் என்பது தான் தற்போதைய ரசிகர்களின் மனநிலை. இன்று மாலை பல வெளிநாடுகளில் கபாலியின் ப்ரீமியர் ஷோ தொடங்குகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here