மதுரையில் நடிகை சமந்தாவைக் காண திரண்ட ரசிகர்களால் பரபரப்பு

மதுரையில் நடிகை சமந்தாவைக் காண திரண்ட ரசிகர்களால் பரபரப்பு

112

மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த நடிகை சமந்தாவை காண திரண்ட ரசிகர்கள் திரண்டனர். மதுரை பைபாஸ் சாலையில் தனியார் நிறுவனத்தின் கடை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை திறந்து வைப்பதற்காக நடிகை சமந்தா அங்கு வந்திருந்தார்.

அவரை நேரில் காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, ரசிகர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர்.

ஆனால் ரசிகர்கள் யாரும் கலைந்து செல்லாததால் போலீஸார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை அங்கிருந்து கலையச் செய்தனர். இதனால் அந்தப்பகுதியில் சற்று நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.

samanatha 1 samanatha

NO COMMENTS

LEAVE A REPLY