Home Tamil Cinema News ரசிகர்களின் பாராட்டு மழையில் நனையும் விஜய் ‘சேதுபதி’

ரசிகர்களின் பாராட்டு மழையில் நனையும் விஜய் ‘சேதுபதி’

168

Sethupathi

பண்ணையாரும் பத்மினியும் புகழ் அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள “சேதுபதி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. ஒரு சில இடங்களில் இப்படம் 9 மணி காட்சிகளே தொடங்கிவிட்டது.

நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் சேதுபதி உள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார்.

படம் பார்த்த ரசிகர்கள் கூறிய தகவலின்படி, கண்டிப்பாக இப்படமும் விஜய் சேதுபதிக்கு நல்ல பெயரை வாங்கி கொடுக்கும் மேலும் இப்படம் ஒரு நல்ல பேமிலி எண்டர்டெய்னர் என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

மேலும் “போலீஸ் தான் ஹீரோ, போலீஸ் தான் கெத்து. -புல்லட் தெறிக்கும் சேதுபதி” என்று சமூக வலைத்தளங்களில் சேதுபதியை பாராட்டி பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர் சினிமா ரசிகர்கள்.