Home Tamil Cinema News தெறி படம் திரையரங்குகளில் திரையிட மறுப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள்

தெறி படம் திரையரங்குகளில் திரையிட மறுப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள்

343

Theri-Movie

தெறி படத்தின் தயாரிப்பாளர் தாணு ஒரு பிரமாண்ட தொகையை இப்படத்திற்கு விநியோகஸ்தர்களிடம் கூறியுள்ளாராம். ஆனால், இவர் கூறும் விலைக்கு யாரும் வாங்க முன்வரவில்லையாம்.

ஏனெனில் தற்போதுள்ள படங்கள் அனைத்தும் முதல் வார வசூல் மட்டுமே வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றது. அந்த வகையில் தாணு கூறும் தொகைக்கு வாங்கினால் கிட்டத்தட்ட படம் 40 நாட்கள் குறைந்தது 80% கூட்டம் வந்தால் தான் லாபம் கிடைக்கும்.

இதன் காரணமாகவே பேச்சு வார்த்தை இன்றுவரை நடந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இளைய தளபதி படம் வந்தாலே போட்டிப்போட்டுக்கொண்டு திரையிடுவார்கள்.

இந்த நிலையில் சென்னையில் பிரபல திரையரங்கு ஒன்று விஜய்யின் கோட்டை என சொல்வார்கள். அந்த அளவிற்கு விஜய் படங்களுக்கு அந்த திரையரங்கில் வரவேற்பு இருக்கும்.

நேற்று அந்த திரையரங்கில் தெறி படம் இங்கு திரையிடப்படவில்லை என கவுண்டரில் எழுதி ஒட்டியுள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.