Home Tamil Breaking News அரசுக்கு எதிராக ஜெய்ப்பூரில் மண்ணுக்குள் புதைந்து விவசாயிகள் போராட்டம்

அரசுக்கு எதிராக ஜெய்ப்பூரில் மண்ணுக்குள் புதைந்து விவசாயிகள் போராட்டம்

103
SHARE

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மண்ணுக்குள் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர். கழுத்து வரை மண்ணுக்குள் புதைந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். வீடு கட்டும் திட்டத்திற்காக அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்தியதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஜெய்ப்பூர் மாநகராட்சி சார்பில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தபடுவதால் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒருகட்டமாக நேற்று மண்ணுக்குள் புதைந்து போராட்டம் நடத்தினர். கிராமத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு அசைந்து கொடுக்காததால் உயிரை மாய்த்து கொள்ள போவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here