Home Health Women Health Care பெண்களின் வயிற்று சதை குறைய உடற்பயிற்சிகள்

பெண்களின் வயிற்று சதை குறைய உடற்பயிற்சிகள்

2019

Exercises

நம் இந்திய பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும். இத்தகைய பெண்கள் எல்லாம் ஏரோபிக்ஸ் பயிற்சி செய்து வந்தால் உறுதியான உடம்புடன் கட்டழகினையும் பெறலாம்.

இப்படி சதை தொங்கி மடிப்பு விழ கொழுப்பு கூடுவது தான் காரணம். இத்தகைய வேண்டாத கொழுப்புகளை எல்லாம் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி கரைத்து விடும். இன்னும் சில பெண்கள் வயிற்றில் தொங்கும் வேண்டாத சதைகளையும், பருமனான உடம்பையும், பெருத்த வயிற்றையும் குறைக்க பெல்லிரோலர், வைபிரேட்டர் போன்ற கருவிகளில் முயற்சி செய்து பணத்தை செலவு செய்த பின்னரும் குண்டான உடம்பு குறையவில்லை என்று கூறுவார்கள்.

இத்தகைய பெண்கள் எல்லாம் ஏரோபிக்ஸ் என்ற உடற்பயிற்சியினை செய்து எளிதில் உடல் நலம் பெறலாம். பெண்கள் எடைப்பயிற்சி செய்யலாமா? செய்யக்கூடாதா? என்ற கருத்து உண்டு. பெண்கள் எடை பயிற்சியினை தவிர்ப்பது நல்லது.

பெண்களின் உள் உறுப்புகளில் சில, ஆணின் உள் உறுப்புகளில் இருந்து மாறுபட்டிருக்கிறது. பால் சுரப்பிகள், கருப்பைகள், எல்லாம் ஆணிலிருந்து மாறுபட்டிருப்பதால் பெண்கள் எடைப்பயிற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.

சித்த மருத்துவம்: சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.