நியூஜெர்ஸியில் தொடங்கியது 2016 ஃபெட்னா தமிழ் விழா

நியூஜெர்ஸியில் தொடங்கியது 2016 ஃபெட்னா தமிழ் விழா

74

fetna function

வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் ஃபெட்னா(FeTNA)2016 ஆம் ஆண்டு தமிழ் விழா, அமெரிக்காவில் உள்ள நியூஜெர்ஸி மாநிலம் ட்ரென்டன் நகரில் இன்று தொடங்கியது. இந்நிகழ்வு வரும் ஜூலை 4-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த விழாவில் அரவிந்த் சாமியும் விஜய் பிரகாஷும் கலந்துகொள்ள, இன்றைய நாள் நிகழ்வாக நன்கொடையாளர்கள் சிறப்பு விருந்துடன் விழா ஆரம்பமாகி உள்ளது.

மேலும் இதில் ‘தமிழிசை’ டிஎம்கிருஷ்ணா, சித்த மருத்துவர் சிவராமன், பேராசிரியர் ராமசாமி, பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ், தமிழ் மரபு அறக்கட்டளை டாக்டர் சுபாஷிணி, சங்க இலக்கிய ஆங்கில மொழிபெயர்ப்பாளர் வைதேகி ஹெர்பர்ட், பாடகர் விஜய்பிரகாஷ், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பேரவைத் தலைவர் நாஞ்சில் பீட்டர், விழா ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பழனிசாமி சுந்தரம், நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கத் தலைவர் உஷா கிருஷ்ணகுமார் ஆகியோர் விழாவுக்கு அனைவரையும் வரவேற்றனர்.

 

NO COMMENTS

LEAVE A REPLY