சூப்பர் ஸ்டார் பற்றிய வதந்தியால் அதிர்ச்சியில் திரையுலகம்

சூப்பர் ஸ்டார் பற்றிய வதந்தியால் அதிர்ச்சியில் திரையுலகம்

106

Film Industry Shocked to the Rajinikanth Rumours

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் கபாலி படம் பா. இரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ஜுன் 12ம் தேதி வரும் என கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இவர் அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகின்றது, இதுமட்டுமின்றி நேற்று யாரோ ரஜினிகாந்திற்கு உடல்நிலை சரியில்லை அதனால் தான் அமெரிக்கா சென்றுள்ளார் என்று வதந்தியை பரப்பிவிட்டனர்.

இந்தச் செய்தி காட்டுதீ போல் பரவியது. ஆனால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, அவர் நலமாக தான் இருக்கிறார் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY