Home Tamil Cinema News சுந்தர் சி-க்கு எதிராக திரைப்படத் தயாரிப்பாளர் புகார்

சுந்தர் சி-க்கு எதிராக திரைப்படத் தயாரிப்பாளர் புகார்

137

Aranmanai-Sundar-C

இயக்குனர் சுந்தர்.சி’யின் அரண்மனை 2 நேற்று வெளியாகி நல்ல தமிழ் திரையுலக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் சித்தார்த், த்ரிஷா, ஹன்ஷிகா போன்றோர் நடித்துள்ளனர். படம் வெளியாகும் வரை இந்தப்படத்திற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஆனால் தற்போது பழம் பெரும் திரைப்பட தயாரிப்பாளர் எம்.முத்துராமன் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். 1978ல் வெளியான ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் கதையைதான் அரண்மனை 2 என்ற பெயரில் சுந்தர்.சி படமாக்கியுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.

வழக்கினால் படத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இப்போது சுந்தர்.சி படத்தின் கதைக்காக 10 லட்சம் தர ஒப்புக்கொண்டுள்ளார், இதனால் இருவரும் சமரசம் செய்துகொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதற்காக இருவரும் பிப்ரவரி 1-ந் தேதி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி சமரச பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். படத்தின் மீதான பிரச்சனை முடிந்ததால் படகுழு தற்போது நிம்மதியில் உள்ளது.