பல கோடி நஷ்டம் அடைந்த பட அதிபர் மதன்!

பல கோடி நஷ்டம் அடைந்த பட அதிபர் மதன்!

169

Puliparvai

வாரணாசி கங்கையில் மூழ்கி சமாதி ஆகப்போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கடந்த 27-ந்தேதி பட அதிபர் மதன் மாயமானார். அவர் கதி என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. போலீசார் அவர் பிடிக்க தனிப்படை அமைத்து தேடுகின்றனர். தயாரிப்பாளர் சங்கத்தினரும் காசி பகுதிகளில் முகாமிட்டு கங்கையில் படகில் சென்று தேடி வருகிறார்கள்.

அவர் காணாமல் போய் 8 நாட்களாகியும் அவரைப்பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை. அவர் கடிதத்தில் குறிப்பிட்டது போல் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாமோ? என்ற சந்தேகம் திரையுலகினர் மத்தியில் வலுத்து இருக்கிறது. இதனால் அவரது குடும்பத்தினர் பதற்றத்தில் உள்ளனர்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக கொன்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து புலிப்பார்வை என்ற படத்தையும் மதன் தயாரித்தார். இது தணிக்கை குழுவினரின் கெடுபிடிகளில் சிக்கி பல நாட்கள் கஷ்டப்பட்டு வெளிவந்ததாக கூறப்படுகின்றது.

கடந்த வருடம் மதன் கடைசியாக தயாரித்த ‘பாயும் புலி’ படம் வெளியானது.

லிங்கா, பாயும் புலி படங்களில் நஷ்டம் அடைந்ததாகவும் தலைவா படம் திட்டமிட்டபடி திரைக்கு வராததால் பாதிப்பு ஏற்பட்டதாகவும் மதன் தனது கடிதத்தில் எழுதி வைத்து இருக்கிறார்.

மேலும், வருமான வரித்துறையினர் சோதனையில் ரூ.6.50 கோடியை இழந்ததாகவும் கடிதத்தில் கூறியிருக்கிறார். சில மாதங்களாக, தயாரிப்பு மற்றும் வினியோக பணிகளில் அவர் ஈடுபடவில்லை. இந்த காரணத்தினால் தான் மதன் தற்போது மாயமாகியிருக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY