Home Tamil Cinema News ’24’ படத்தின் பர்ஸ்ட் லுக் படங்களை வெளியிட்டார் சூர்யா

’24’ படத்தின் பர்ஸ்ட் லுக் படங்களை வெளியிட்டார் சூர்யா

157

24-First-Look-1

சூர்யா நடித்து வெளியாகும் படம் ‘24’ திரைப்படத்தின் பஸ்ட் லுக் படங்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை விக்ரம் குமார் இயக்குகிறார். சமந்தா கதானாயகியாக வருகிறார். டைம் மெஷின் சம்பந்தப்பட்ட சயின்ஸ் திரில்லர் கதையாக இப்படம் உருவாகி உள்ளது.

இதில் அறிவியல் விஞ்ஞானியாக சூர்யா நடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இப்போது எடிட்டிங் பணிகள் நடந்து வருகிறது. படத்தின் பெயர் 24 என்பதால், அதே தேதியில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட பட ஹீரோவும் இப்பட தயாரிப்பாளருமான சூர்யா முடிவு செய்தார்.

அதன்படி அவர் நேற்று இந்த படத்தின் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் தனது புது தொற்றத்தயும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். தாடியுடன் வித்தியாசமான ஹேர்ஸ்டைல், கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு இருப்பதுபோல் பபடங்களை வெளியிட்டுள்ளார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சூர்யாவின் ’24’ வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.