Home Tamil Breaking News அஸ்ஸாமில் அடுத்தடுத்து வெள்ள பாதிப்பு…

அஸ்ஸாமில் அடுத்தடுத்து வெள்ள பாதிப்பு…

28

கவுகாத்தி : அசாமின் 5 மாவட்டங்கள் மீண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அசாம் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் மீண்டும் வெள்ளத்தில் சிக்கி உள்ளதால் திமாஜி, லகிம்பூர், சோனித்பூர், மோரிகயான், நாகாயன் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த 72,000 பேர் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அசாமில் பரவலாக மீண்டும் தொடர் மழை பெய்து வருவதால் ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மீட்புப் பணிகளும் பாதிப்படைந்துள்ளன. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களில் 21 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 100 க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்திரா நதி தொடர்ந்து அபாய கட்டாயத்திலேயே இருந்து வருவதாக அசாம் பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.