Home World News இர்மா புயலின் தாக்கம் இன்னும் குறையவில்லை… புளோரிடாவில் 7.3 லட்சம் வீடுகள் சேதம்..

இர்மா புயலின் தாக்கம் இன்னும் குறையவில்லை… புளோரிடாவில் 7.3 லட்சம் வீடுகள் சேதம்..

29


 மியாமி : அமெரிக்காவை கடுமையாக தாக்கி வரும் இர்மா புயல் வலுவிழந்து விட்டாலும், அதன் தாக்கம் இன்னும் குறைந்த பாடில்லை. தற்போது புயல் சின்னம் புளோரிடாவை நெருங்கி வருகிறது.
சூறாவளி காற்று அதிதீவிரமாக வீசி வருகிறது. இதனால் புளோரிடாவில் இருந்து இதுவரை 56 லட்சம் மக்கள் வெளியேறி உள்ளனர். 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இர்மா புயலில் சிக்கி இதுவரை 3 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 27 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

மணிக்கு 110 மைல் வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமெரிக்க அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதுவரை இர்மா புயலுக்கு 7.3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.