Home Tamil Cinema News பொங்களுக்கு ரிலீஸாகும் நான்கு படங்கள் – 2016

பொங்களுக்கு ரிலீஸாகும் நான்கு படங்கள் – 2016

560

Pongal release 2016

பொங்கள் அன்று அஜித், விஜய், கமல், மற்றும் ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பிலிருக்கும் இளம் நடிகர்களின் 4 படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ரஜினிமுருகன், திருமுகன் இயக்கத்தில் உதயநிதி, எமி ஜாக்ஸன் நடித்திருக்கும் ‘கெத்து’, பாலாவின் இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடித்திருக்கும் ‘தாரை தப்பட்டை’, பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால், கேத்ரின் தெரஸா நடித்திருக்கும் ‘கதகளி’ ஆகிய நான்கு படங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடைசி நேரத்தில் இந்தப் பட்டியலில் ஏதாவது ஒரு படம் வெளியேறலாம். அல்லது ஒன்றிரண்டு சிறிய பட்ஜெட் படங்கள் இந்த நான்கு படங்களுடன் சேர்ந்து களத்தில் குதிக்கலாம்.

உறுதி செய்யப்பட்டுள்ள இந்த 4 படங்களும் தற்போது தியேட்டர்களை வளைத்துப் பிடிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனாம். கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களும் இந்த 4 படங்களுக்காக ‘பிளாக்’ செய்து வைக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

1. ரஜினிமுருகன் – View Trailer | View Photos
2. கெத்து – View Trailer | View Photos
3. தாரை தப்பட்டை – View Trailer | View Photos
4. கதகளி – View Trailer | View Photos