Home Tamil Cinema News எம்.ராஜேஷின் ‘கிக்’ படத்தின் பணிகளை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்

எம்.ராஜேஷின் ‘கிக்’ படத்தின் பணிகளை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்

113

G.-V.-Prakash-Kumar

முதன்முறையாக எம்.ராஜேஷ் உடன் ஜி.வி.பிரகாஷ் இணையும் முதல் படம் தயாராகவுள்ளது. இதற்காக ஜி.வி.பிரகாஷ் நாட்களை ஒதுக்கி படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார்.

ஜி.வி.பிரகாஷ் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமில்லாமல், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய படங்கள் பெரிய வெற்றியடைந்ததை அடுத்து, தற்போது இவருக்கு ஹீரோ வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

எம்.ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்கிறான் குமாரு’ என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், இப்படத்திற்கான பாடல் பதிவுகளை ஜி.வி.பிரகாஷ் தொடங்கியுள்ளார். ‘கடவுள் இருக்கிறான் குமாரு’ என்கிற கிக் படத்தின் பாடல்கள் இன்றைய தலைமுறைகளை கவரும் வகையிலும், இசையின் மீது ஆர்வமுள்ளவர்களை கவரும் வகையிலும் இளமை ததும்பும் பாடல்களாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.