நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது

நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது

157

genelia-dsouza-baby-bump

பாலிவுட் நடிகர் ரிதேஷ்க்கும் நடிகை ஜெனிலியாவும் கடந்த பிப்ரவரி மாதம் தங்களது நான்காவது திருமண நாளை கொண்டாடினர். இவர்கள் துஜே மேரி கசம், தேரே நாள் லவ் ஹோ கயா போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

ஜெனிலியாவுக்கு 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2014-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ரியான் என்று பெயர். அந்த குழந்தைக்கு தற்போது இரண்டு வயது ஆகிறது.

இந்த நிலையில், ஜெனிலியாவுக்கு அடுத்ததாகவும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை ரிதேஷ் ட்விட்டர் வழியாக இன்று அறிவித்தார். இதனையடுத்து நட்சத்திரத் தம்பதிகளுக்கு திரையுலகப் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY