Home Tamil Movie Reviews கெத்து – விமர்சனம்

கெத்து – விமர்சனம்

524
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் திருக்குமரனின் இரண்டாவது படம். முதல் படத்தில் சிவகார்த்திகேயனை வைத்து ’கராத்தே’ பழகியவர் இதில் உதயநிதியை வைத்து துப்பாக்கி விளையாட்டு விளையாண்டிருக்கிறார்.

மொத்தத்தில் கெத்து - த்ரில்லர் விரும்பிகள் பார்த்து ரசிக்கலாம்.

3.5
இயக்கம்: திருக்குமரன்
ஒளிப்பதிவு: சுகுமார்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
தயாரிப்பு: ரெட் ஜெய்ன்ட் மூவீஸ், உதயநிதி ஸ்டாலின்
நடிகர்கள்: உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், சத்யராஜ், மைம் கோபி, விக்ராந்த்
முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் சந்தானம் இல்லாமல் சோலோவாக அதுவும் ஆக்க்ஷன் ஹீரோவாக களத்தில் குதித்துள்ளார். மான் கராத்தே என்கிற படத்தை கொடுத்த இயக்குநர் திருக்குமரனுடன் உதயநிதி ஸ்டாலின் இணைந்திருக்கும் படம் தான் இந்த ’கெத்து’.
Gethu Movie Posters 16
ஒரு பள்ளியில் பி.டி மாஸ்டராக வரும் சத்யராஜ் தன் கெத்தை எங்கும் விட்டு கொடுக்காத நபர். அதுவும் அநியாயத்தை கண்டு பொங்கி எழும் கெத்தான ஆளு. அவருக்கு சாதுவான மகனாக உதயநிதி.
சத்யராஜ் வேலை செய்யும் பள்ளி அருகே முக்கிய வில்லனான மைம் கோபியின் ஒயின் ஷாப் உள்ளதால் மாணவர்களுக்கு சங்கடம் ஏற்படுகிறது. இதை கண்டு சத்யராஜ் போலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்க, வில்லன் ஆட்கள் சத்யராஜை தொந்தரவு செய்கின்றனர், ஒரு கட்டத்தில் மூட சொன்ன பாரில் சத்யராஜை வில்லன் ஆட்கள் அடிக்க வரும் போது சாதுவாக இருக்கும் உதய் அங்கு ஆக்க்ஷன் அவதாரம் எடுக்கிறார்.
gethu-stills-1
தன் அப்பாவின் கண் முன்னே முக்கிய வில்லனான மைம் கோபியை அடித்து நொறுக்குகிறார். மறுநாள் மைம் கோபி குமளியில் ஒரு நீர்விழ்ச்சியில் மர்மமான முறையில் செத்து கிடக்கிறார், அவர் கையில் சத்யராஜின் மோதிரம் கிடைக்க போலிஸ் அவரை கைது செய்கிறது.
இதனிடையே மைம் கோபியின் அண்ணன்கள் சத்யராஜை போட தவம் கிடக்கின்றனர், இவர்களிடமிருந்து உதய் எப்படி சத்யராஜை காப்பாற்றுகிறார், விக்ராந்த் குமளிக்கு வர என்ன காரணம், இந்த கொலைக்கும் விக்ராந்துக்கும் சம்மந்தம் இருக்குமா? தன் அப்பா குற்றமற்றவர் என்பதை எப்படி நிரூபிக்கிறார் என்பதே இந்த கெத்து.
காமெடி, காதல் என்கிற வழக்கமான பார்முலாவுக்குள் போகாமல் முதல் தடவையாக ஒரு த்ரில்லர், சீரியஸ் கதையை தேர்ந்தெடுத்ததற்காக உதயநிதியின் தைரியத்தை பாராட்ட வேண்டும். புது கெட்டப்பில் மட்டுமில்லாமல், கூடுதலான டான்சிலும் சண்டைக்காட்சிகளும் அவரது மெனக்கிடல் தெரிகிறது.
00-feature102-1140x760-minஹீரோயினாக வரும் எமி ஜாக்சன் நடிப்பதில் காட்டும் ஆர்வத்தை கொஞ்சம் உடம்பை தேற்றுவதிலும் காட்ட வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது, வில்லனாக வரும் விக்ராந்த்துக்கு தனது நடிப்புத் திறமையை திரையில் காட்ட ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதையும் அவர் மிக அழகாக பயன்படுத்தியிருக்கிறார்.

அப்பாவாக வரும் சத்யராஜூக்கு நடிக்கச் சொல்லித்தர வேண்டுமா என்ன? ஜமாய்த்திருக்கிறார். ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் தில்லு முல்லு, அடியே அடியே என எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட் சாங்க்ஸ்.
1450525939_gethu-upcoming-tamil-drama-film-written-directed-by-thirukumaran-produced-by-udhayanidhiகொடைக்கானலின் பார்க்காதை இடங்களை மெய்மறக்கச் செய்கிற அளவுக்கு கிளிக் செய்து வந்திருக்கிறது சுகுமாரின் ஒளிப்பதிவு.

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் திருக்குமரனின் இரண்டாவது படம். முதல் படத்தில் சிவகார்த்திகேயனை வைத்து ’கராத்தே’ பழகியவர் இதில் உதயநிதியை வைத்து துப்பாக்கி விளையாட்டு விளையாண்டிருக்கிறார்.

மொத்தத்தில் கெத்து – த்ரில்லர் விரும்பிகள் பார்த்து ரசிக்கலாம்.

1 COMMENT

  1. This is definitely a new genre for Udhayanidhi, who has previously starred in only romantic comedies and the actor, who has also produced the film under the banner, Red Giant Movies, does show a lot of potential.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here