Home Tamil Cinema News தவறாக நடக்க முயலும் ஆண்களை கண்டு அஞ்சாமல் திருப்பி அடிக்க வேண்டுமென வித்யாபாலன் பேச்சு

தவறாக நடக்க முயலும் ஆண்களை கண்டு அஞ்சாமல் திருப்பி அடிக்க வேண்டுமென வித்யாபாலன் பேச்சு

149

vidya-balan

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் வித்யாபாலன். மும்பையில் நடந்த இளைஞர்கள் நல நிகழ்ச்சியொன்றில் வித்யாபாலன் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசும்போது,

ஆண், பெண்களை பிரித்து பார்க்க கூடாது. இருவருக்கும் சம உரிமை இருக்கிறது. இன்றைய உலகமும் அதை நோக்கித்தான் போய்க்கொண்டு இருக்கிறது. பெண்கள் ஆடை உடுத்துவதை வைத்து அவர்களை மதிப்பீடு செய்வது தவறு.

பெண்கள் எந்த மாதிரி ஆடைகளை அணிய விரும்புகிறார்களோ அதை அணிந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். ஆடையை வைத்துத்தான் பெண்களுக்கு மரியாதை என்ற நிலைமை இருக்கக்கூடாது. பெண்கள் எந்த துறையை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம் நடிகையாகவும் இருக்கலாம்.

ஆடைகள் அணிவதில் அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. அவர்கள் உடுத்தும் ஆடைகளின் நீளத்தை வைத்து மரியாதை அளிப்பது ஏற்புடையது அல்ல. எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன. ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகிறார்கள்.

ஈவ் டீசிங் மற்றும் தவறாக நடக்க முயலும் ஆண்களை பார்த்து பெண்கள் அஞ்சி அலறக்கூடாது. அவர்களை திருப்பி அடிக்க வேண்டும். அப்படி செய்தால் பயந்து ஓடி விடுவார்கள்.

ஆண்கள் போல் பெண்களும் தனது சொந்த காலில் நிற்க வேண்டும். முன்பெல்லாம் தொழில் நிறுவனங்களில் பெண்களை பார்க்க முடியாது. ஆனால் இப்போது வேலை பார்க்கும் பெண்களை அதிகம் பார்க்க முடிகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறாக வித்யாபாலன் பேசினார்.

வித்யாபாலன் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘த டர்ட்டி பிக்சர்’ படத்தில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானார். இதில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.