Home World News 19வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது கூகுள்!

19வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது கூகுள்!

30

கலிபோர்னியா: உலகின் முதன்மையான தேடுதல் எஞ்சினாக செயல்படுகின்ற கூகுள் நிறுவனத்தின் 19வது பிறந்த நாள் இன்றைக்கு கொண்டாடப்பட்டு வருகின்றது.

செப்டம்பர் 15, 1997 அன்று google.com என்கிற டொமைன் பதிவு செய்யப்பட்டது, கூகுள் ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்ட வருடம் செப்டம்பர் 4, 1998-ம் ஆண்டு. இதில் எதை பிறந்த நாளாகக் கொண்டாடுவது?. இந்தக் குழப்பத்தின் காரணமாகவே 2003-ம் ஆண்டு செப்டம்பர் 8 ம் தேதி, 2004-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி, 2005-ம் ஆண்டு செப்டம்பர் 26 என வெவ்வேறு நாட்களில் பிறந்தநாள் கொண்டாடியது கூகுள்.

அதன்பிறகு ஒரு முடிவெடுத்து 2006-ல் இருந்து செப்டம்பர் 27-ம் தேதியை தன் பிறந்தநாளாக கொண்டாடி வருகிறது. இதனை அடுத்து இன்று கூகுள் நிறுவனத்தின் பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் பிறந்தநாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் டூடுலை வெளியிட்டுள்ளது. கூகுள் இணையதள தேடுதலின் மஹாராஜா என்றால் மிகையல்ல, சர்வதேச அளவில் 123 மொழிகளில் 160க்கு மேற்பட்ட நாடுகளில் 4.5 பில்லியன் பயனாளர்களை பெற்றுள்ளது. ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக மாணவர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரின் கூட்டணியில் உருவான கூகுள் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here