Home World News பிரேசில் : 245 பேர் இணைந்து பாலத்தில் ஊஞ்சல் ஆடி கின்னஸ் சாதனை

பிரேசில் : 245 பேர் இணைந்து பாலத்தில் ஊஞ்சல் ஆடி கின்னஸ் சாதனை

43

பிரேசிலியா: பிரேசில் நாட்டின் ஹோர்டோலண்டியா பகுதியில் உள்ள 30 அடி உயரமான பாலத்தில் இருந்து 245 பேர் ஒரே நேரத்தில் ஊஞ்சலாடி சாதனை படைத்தனர். இப்போட்டியில் சாகச விரும்பிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 245 பேர் இணைந்து பாலத்தில் ஊஞ்சல் ஆடி கின்னஸ் சாதனைப் படைத்தனர். பாலத்தில் இருந்து ஒரே நேரத்தில் கீழே குதித்தனர். 245 பேரும் பாலத்தில் ஊஞ்சல் ஆடுவதை பார்த்த பார்வையாளர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

சாகசப்போட்டி முடிந்தவுடன் சிலர் பாலத்தில் அடியில் உள்ள நீருக்குள் குதித்தனர். மீதி பேர் பாலத்திற்கு மேலே ஏறினர். கின்னஸ் சாதனைப்புத்தகத்தில் இடம்பெறுவதற்காக நடத்தப்பட்டதாக இந்த சாகசப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here