Home Tamil Breaking News காங்கிரஸ் கட்சியின் அகமது படேல் வெற்றி…

காங்கிரஸ் கட்சியின் அகமது படேல் வெற்றி…

108

அகமதாபாத்: குஜராத் ராஜ்யசபா தேர்தலில் பெரும் போராட்டத்திற்குப் பின் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் அகமது படேல், தனது வெற்றி சத்தியத்திற்கு கிடைத்த வெற்றி என்று ட்விட்டியுள்ளார். இதன் மூலம் குஜராத் மாநிலத்தில் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷாவின் ராஜதந்திரத்திற்கு முதல் அடி கிடைத்துள்ளது. குஜராத்தில் ராஜ்யசபா தேர்தல் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலை தோற்கடிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்தது பாஜக. இதனால் பெங்களூர் ரிசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேரை அக்கட்சி தங்க வைத்து அடைகாத்தது.

வாய்மையே வெல்லும்: தனது வெற்றி குறித்த அறிவிப்பு வெளியான உடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அகமது படேல், வாய்மையே வெல்லும் என்று பதிவிட்டார். இந்த வெற்றி சாதாரணமாக கிடைத்தது அல்ல. பணத்திற்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here