Home Tamil Breaking News குஜராத் ராஜ்யசபா தேர்தல் இன்று…

குஜராத் ராஜ்யசபா தேர்தல் இன்று…

25

காந்தி நகர்: குஜராத் ராஜ்யசபா தேர்தலில் இன்று அகமது படேல் வெற்றி வாய்ப்பை பெறுவாரா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜ்யசபா தேர்தல் குஜராத்தில் இன்று தொடங்கியது. 182 பேர் கொண்ட குஜராத் சட்டசபை உறுப்பினர்களில் 176 பேர் 3 ராஜ்ய சபா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வாக்களித்து வருகின்றனர். பாஜக சார்பில் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, பல்வந்த் சிங் ராஜ்புட் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் அகமது படேலும் போட்டியிடுகின்றனர்.வேட்பாளர்கள் வெற்றி பெறத் தேவையான முன்னுரிமை வாக்குகள் 45. பாஜகவால் 2 பேரையும் காங்கிரஸால் ஒருவரையும் வெற்றி பெறச் செய்ய முடியும்.122 எம்எல்ஏ-க்கள் கொண்ட பாஜகவுக்கு இரு உறுப்பினர்களை வெற்றி அடைய செய்வது எளிதான காரியமாகும். தற்போது போட்டியே மூன்றாவது உறுப்பினரான அகமது படேலுக்கும் ராஜ்புட்டுக்கும்தான்.

அண்மையில் காங்கிரஸில் இருந்து தாவிய ராஜ்புட்டுக்கு ஆதரவாக வாக்களிக்க போதிய உறுப்பினர்கள் இல்லாதபோதிலும் காங்கிரஸுக்குள் குட்டையைக் குழப்பி அகமது படேலை தோல்வி அடையை வைக்க பாஜக கடுமையாக முயற்சிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here