Home Tamil Cinema News கயல் ஆனந்தியுடன் மீண்டும் இனையும் ஜி.வி.பிரகாஷ்!

கயல் ஆனந்தியுடன் மீண்டும் இனையும் ஜி.வி.பிரகாஷ்!

280

pic-trisha-illana-nayanthara

ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. ஜி.வி.யை வைத்து ‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன் தான் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தையும் இயக்குகிறார்.

இப்படத்தில் ஜி.வி.யுடன் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் இணைந்து நடித்த ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ‘பருத்தி வீரன் சரவணன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘யோகி’ பாபு, நிரோஷா, ‘லொள்ளு சபா’ சாமிநாதன், ‘லொள்ளு சபா’ மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்க்ள்.ஜி.வி.யே இசை அமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை கிருஷ்ணன் வசந்த் கவனிக்கிறார். படத்தொகுப்பை ஆன்டனி ரூபன் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

‘கத்தி’ படத்தை தயாரித்த ‘லைக்கா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தொடர்ந்து பல படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘எந்திரன்-2’ படத்தை பிரம்மாண்டமான முறையில் இந்நிறுவனம் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here