ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

146

Gv Prakash

ஜி.வி.பிரகாஷ் தற்போது எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’ படத்தில் நடித்துவருகிறார். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். சாம் ஆண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலரை ஜூன் 1ம்தேதி வெளியிட இருக்கிறார். இதை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடவுள்ளார். இதையடுத்து இப்படத்தை ஜூன் 17ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் வெளியான டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா ஆகிய படங்கள் ஹிட்டானது. சமீபத்தில் வெளியான பென்சில் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY