Home Tamil Cinema News ஜீ வி பிரகாஷ் நடிக்கும் கிக் – மறுபடியும் டாஸ்மாக்கா!

ஜீ வி பிரகாஷ் நடிக்கும் கிக் – மறுபடியும் டாஸ்மாக்கா!

145

gv prakash

ராஜேஷின் கடைசி இரண்டு படங்கள் ஓரளவுக்கு ஓடிய நிலையில், ஜீ.வி.பிரகாஷை வைத்து அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார். படத்தின் பெயரோ ‘கடவுள் இருக்கிறான் குமாரு’ எனும் கிக்(KiK). பாடகர், இசையமைப்பாளர் போன்ற பல வேலைகளில் கலக்கிவந்த ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிகராகவும் வெற்றிகளை பெற்றுவருகிறார்.

இயக்குனர் ராஜேஷ் இதுவரை இயக்கிய எல்லா படங்களும் கொஞ்சம் வித்தியாசமானவை. சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்கள் நன்றாக ஓடினாலும், அதன் பிறகு எடுத்த ஆல் இன் அழகு ராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க ஆகிய படங்கள் சரிவர ஓடவில்லை.

இருப்பினும் அதனைத்தொடர்ந்து தற்போது கிக் படத்தை இயக்கவுள்ளார். ராஜேஷ் படங்களின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி டாஸ்மாக் குடி காட்சிகள். டாஸ்மாக்கையும், குடியையும் காண்பிக்காமல் படம் எடுத்தால் ராஜேஷால் தூங்க முடியாது போல் இருக்கிறது. இருப்பினும் அதுதான் முக்கிய பகுதியாக அவரது படங்களில் உள்ளது.

பெயரிலேயே கிக் இருப்பதனால், படத்திலும் டாஸ்மாக், பார் மற்றும் சில குத்துப் பாட்டுக்களும் இருக்கும் என நம்பலாம்.