Home Tamil Cinema News டூப் இல்லமல் நடித்து மிரட்டிய ஹன்சிகா!

டூப் இல்லமல் நடித்து மிரட்டிய ஹன்சிகா!

476

hot-actress-hansika-motwani

நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டார். அவர் நடிப்பில் நாளை உயிரே உயிரே படம் திரைக்கு வரவிருக்கிறது.

இந்தப்படத்தில் சில இளைஞர்கள் இவரை பலாத்காரம் செய்யவருவது போல் ஒரு காட்சி, இதில் வழக்கம் போல் ஹீரோ அவர்களை அடித்து ஹீரோயினை காப்பாற்றுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்ததாம்.

இந்தக் காட்சியில் நடிக்க சில முன்னணி நடிகைகள் என்றால் டூப் போடுவார்களாம், ஆனால், ஹன்சிகா தைரியமாக நானே நடிக்கின்றேன் என கூறி படக்குழுவினரை ஆச்சரியப்படுத்திவிட்டாராம்.