Home Tamil Cinema News நான் சிம்புவை காதலிக்கவே இல்லையென்று கூறும் ஹன்சிகா!

நான் சிம்புவை காதலிக்கவே இல்லையென்று கூறும் ஹன்சிகா!

147

HansikaSimbuParty

சிம்பு-ஹன்சிகா இருவரும் வாலு படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் அவர்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டது, நாளடைவில் இருவரும் ஒன்றாக சுற்றுவதை அறிந்த பலரால் இவர்கள் காதலிப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போலவும் கிளப்பில் காதலர்கள் போல் சேர்ந்து இருப்பது போல் சில புகைப்படங்கள் வெளிவந்தது. இதனால் ஹன்சிகாவும் சிம்புவுடனான காதலுக்காக தனது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகாமல் தவிர்த்துவந்தார்.

அதன் பிறகு எல்லோரும் எதிர்ப்பார்த்தது படி இந்த காதலும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது. ஆனால், ஹன்சிகாவோ சமீபத்தில் ’நான் சிம்புவை காதலிக்கவே இல்லை. நாங்கள் இருவரும் இணைந்து நடித்ததால் வந்த வதந்தி தான் அது’ என்று தனது காதலுக்கு முலுமையாக முற்றுப்புள்ளி வைத்தார்.