Home Tamil Cinema News ‘ஹன்சிகாவுக்கு’ மருத்துவ பரிசோதனை!

‘ஹன்சிகாவுக்கு’ மருத்துவ பரிசோதனை!

111

hansika

டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்றவை பாலிவுட்டை பயமுறுத்தி வந்ததையடுத்து உடனடியாக பல பாலிவுட் நட்ச்சத்திரங்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். தற்போது தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

கடந்த வாரம் மும்பையிலிருந்து சென்னை வந்தார் ஹன்சிகா. விமான நிலையத்திலிருந்து அவர் ஓட்டலுக்கு காரில் புறப்பட்டபோது சாலையில் ஓடிய வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். டிராபிக்ஜாம் அவரை நகர விடாமல் செய்தது. இதையடுத்து கொட்டும் மழையில் காரிலிருந்து இறங்கி நடந்தே அருகிலிருந்த ஓட்டலுக்கு சென்றடைந்தார்.

இதனால் அவரது உடல்நிலை பாதிக்கும் சூழல் உருவானது. ஹன்சிகா பற்றி அவரது தாயார் ரொம்பவே கவலைப்பட்டாராம். முன்னெச்சரிக்கையாக பிளட் டெஸ்ட் எடுத்து பரிசோதனை செய்துகொள்ளும்படி அறிவுரை கூறினார்.

இதையடுத்து மருத்துவமனை சென்றவர் பிளட் டெஸ்ட் எடுத்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இதையறிந்த அவரது ரசிகர்கள் இணையதள பக்கத்தில் ஹன்சிகா உடல்நலன்பற்றி விசாரித்த வண்ணம் இருந்தனர். இதுகுறித்து ஹன்சிகா டுவிட்டர் பக்கத்தில் ‘இது வழக்கமான ஒரு பரிசோதனைதான். நான் நலமுடன் இருக்கிறேன்’ என்று பதில் அளித்துள்ளார்.